சிஎஸ்கே vs ஆர்சிபி: மார்ச் 18 அன்று இணையத்தில் டிக்கெட் விற்பனை

டிக்கெட் கட்டணம் - ரூ. 1700, ரூ. 4000, ரூ. 4500, ரூ. 7500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே vs ஆர்சிபி: மார்ச் 18 அன்று இணையத்தில் டிக்கெட் விற்பனை
ANI
1 min read

சிஎஸ்கே, ஆர்சிபி ஆட்டத்திற்கான டிக்கெட் மார்ச் 18 அன்று இணையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

ஐபிஎல் 2024 போட்டி மார்ச் 22 முதல் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன.

இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை மார்ச் 18 அன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ரசிகர்கள் பேடிஎம் இன்ஸைடர் (Paytm Insider) இணையத்தளம் மூலம் டிக்கெட்டுகளைப் பெறலாம். இம்முறை சென்னையில் நடக்கும் ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே பெறமுடியும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஐபிஎல் ஆட்டங்களில், டிக்கெட் விற்பனை செய்வதில் முறைகேடு நடந்ததாக ரசிகர்கள் மத்தியில் புகார் எழுந்ததைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ள ஆட்டத்திற்கான டிக்கெட் கட்டணம் - ரூ. 1700, ரூ. 4000, ரூ. 4500, ரூ. 7500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in