காயம் காரணமாக முதல் 2 வார போட்டிகளில் தோனி விளையாடுவது சிரமம்: சிஎஸ்கே அணி அறிவிப்பு | MS Dhoni | CSK |

தோனி தற்போது கால் தசைப்பிடிப்பிற்காக சிகிச்சை பெற்று வருகிறார்...
எம்.எஸ். தோனி (கோப்புப்படம்)
எம்.எஸ். தோனி (கோப்புப்படம்)
1 min read

கால் தசைபிடிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதால் ஐபிஎல் 2026-ன் முதல் இரண்டு வார ஆட்டங்களில் தோனி விளையாடுவது சிரமம் என்று சிஎஸ்கே அணி அறிவித்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் 2026 இன்று தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வரும் 30 மார்ச் அன்று குவஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகத் தொடங்கவுள்ளது.

சிஎஸ்கே என்றால் தோனி

சிஎஸ்கே என்றாலே அதன் நம்பிக்கை நட்சத்திரமான எம்.எஸ். தோனிதான். 44 வயதான தோனி, ஐபிஎல் கிரிக்கெட்டில் 242 இன்னிங்ஸில் 5,439 ரன்கள் எடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 248 போட்டிகளில் விளையாடி 4,865 ரன்கள் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஐந்து முறை அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

2025 ஐபிஎல்லில் தோனி

ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததிலிருந்து, தோனி பிரத்யேகமாக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த சீசனில், சூப்பர் கிங்ஸ் அணிக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடிய தோனி, 135.17 ஸ்டிரைக் ரேட்டுடன் 196 ரன்கள் எடுத்திருந்தார். சிஎஸ்கே அணியின் அப்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதால், கடந்த ஆண்டு சீசனின் தொடக்கத்திலேயே தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

தோனிக்கு காயம்

ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக திகழும் தோனி, இந்த லீக்கில் இடம்பெறும் மிக வயதான இந்திய வீரர் என்ற பெருமையையும் பெறுகிறார். இந்நிலையில், தோனிக்கு கால் தசைப்பிடிப்பால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தோனி இந்தத் தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என சி.எஸ்.கே அணி தெரிவித்துள்ளது.

விரைவில் குணமடையுங்கள்! தல

இது தொடர்பாக சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

"எம்.எஸ். தோனி தற்போது கால் தசைப்பிடிப்பிற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதன் விளைவாக, அவர் டாடா ஐபிஎல் 2026 தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளது. விரைவில் குணமடையுங்கள், தல," என்று பதிவிட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி, விக்கெட் கீப்பிங் பொறுப்பை தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சனிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சிஎஸ்கே அணியின் இந்த அறிவிப்பு ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Summary

Chennai Super Kings team has released official statement stating that MS Dhoni is currently undergoing rehabilitation for a calf strain and likely to miss the first two weeks of TATA IPL 2026.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in