தெலங்கானாவின் காவல்துறை துணை கண்காணிப்பாளராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமது சிராஜ் அதிகாரபூர்வமாக இன்று பதவியேற்றார்.
கடந்த ஜுலை மாதத்தில் முஹமது சிராஜ், குத்துச்சண்டை வீராங்கனையான நிகத் ஜரீன் ஆகியோருக்கு டிஎஸ்பி கேடரின் குரூப் 1 பதவி வழங்கப்படுவது தொடர்பான மசோதா தெலங்கானா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தெலங்கானாவின் காவல்துறை துணை கண்காணிப்பாளராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமது சிராஜ் அதிகாரபூர்வமாக இன்று பதவியேற்றார்.
சிராஜ், இதுவரை 29 டெஸ்டுகளில் 78 விக்கெட்டுகளும், 44 ஒருநாள் ஆட்டத்தில் 71 விக்கெட்டுகளும், 16 டி20 ஆட்டத்தில் 14 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.