டக்வொர்த் லூயிஸ் மழை விதிமுறையைக் கண்டிபிடித்த டக்வொர்த் காலமானார்

1997 முதல் டிஎல் விதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
டக்வொர்த்
டக்வொர்த்@icc
1 min read

டக்வொர்த் லூயிஸ் மழை விதிமுறையைக் கண்டிபிடித்த டக்வொர்த் காலமானார்.

மழை போன்ற வானிலை காரணங்களால் கிரிக்கெட் ஆட்டம் பாதிக்கப்படும் பட்சத்தில் ஆட்டத்தின் முடிவுகளைத் தீர்மானிக்க, டக்வொர்த்-லூயிஸ் முறை பயன்படுத்தப்படுகிறது.

ஃப்ராங்க் டக்வொர்த் மற்றும் டோனி லூயிஸ் ஆகிய இருவரும் இணைந்து இந்த விதியைக் கண்டுபிடித்தனர். 1997 முதல் டிஎல் விதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதனை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான டக்வொர்த் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 21 அன்று) தனது 84 வயதில் காலமானார்.

டக்வொர்த் மற்றும் லூயிஸ் ஆகிய இருவருக்கும், கடந்த 2010 ஜூன் மாதத்தில் மெம்பர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் (Member of the Order of the British Empire) எனும் விருது வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in