டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

வில்லியம்சன் தலைமையில் அனுபவமிக்க வலுவான 15 பேருடன் களமிறங்குகிறது நியூசிலாந்து அணி.
டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு@icc

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய கான்வே அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம்சன் தலைமையில் அனுபவமிக்க வலுவான 15 பேருடன் களமிறங்குகிறது நியூசிலாந்து அணி.

காயத்தால் சமீபத்தில் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய கான்வே அணியில் இடம் பெற்றுள்ளார். 1999 ஒருநாள் உலகக் கோப்பை ஜெர்ஸி நிறத்தில் வடிவமைக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்து வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ளது நியூசிலாந்து அணி.

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி: வில்லியம்சன் (கேப்டன்), கான்வே, கிளென் பிலிப்ஸ், ஃபின் ஆலன், ஃபெர்குசன், ரச்சின் ரவீந்திரா, டிம் சௌதி, ஹென்றி, இஷ் சோதி, போல்ட், மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், நீஷம், பிரேஸ்வெல்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in