உடைக்க முடியாத புஜாராவின் சாதனைகள்! | Pujara

இந்தியாவுக்காக 100-க்கும் (103) மேற்பட்ட டெஸ்டுகளில் விளையாடிய 14 வீரர்களில் புஜாராவும் ஒருவர்.
உடைக்க முடியாத புஜாராவின் சாதனைகள்! | Pujara
ANI
1 min read

இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். புஜாரா ஓய்வு பெற்றாலும் அவருடைய பல சாதனைகளை இனியும் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகமே.

முறியடிக்க முடியாத புஜாராவின் சாதனைகள்

  • தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என சேனா நாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட (11) இந்திய வீரர்களில் புஜாராவுக்கே முதலிடம். விராட் கோலி, ரஹானே, ரிஷப் பந்த், பும்ரா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சேனா நாடுகளில் தலா 10 வெற்றிகளைக் கண்டுள்ளார்கள்.

  • டெஸ்டில் ஓர் இன்னிங்ஸில் 500-க்கும் மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்ட ஒரே இந்தியர் புஜாரா. 2017-ல் ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 525 பந்துகொண்டு 202 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்ததாக 495 பந்துகளை எதிர்கொண்டு 2-வது இடத்தில் உள்ளார் டிராவிட்.

  • முதல் தர கிரிக்கெட்டில் அதிக இரட்டைச் சதங்கள் அடித்த இந்திய வீரர் புஜாரா தான். இவர் 18 இரட்டைச் சதங்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்ததாக விஜய் மெர்சண்ட், 11 இரட்டைச் சதங்கள் எடுத்துள்ளார்.

  • இது விநோதமான சாதனை. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ரன்னை எடுப்பதற்கு அதிகப் பந்துகளை எதிர்கொண்ட இந்திய பேட்டர் புஜாரா தான். 2018-ல் ஜொகனஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 54-வது பந்தில் தான் முதல் ரன்னை எடுத்தார்.

  • இந்தியாவுக்காக 2-வது அதிக ரன்கள் எடுத்த ஜோடி புஜாரா - விஜய். 2,615 ரன்கள். சராசரி - 65.37. 9 முறை இக்கூட்டணி 100 ரன்கள் எடுத்துள்ளன.

  • இந்தியாவுக்காக 100-க்கும் (103) மேற்பட்ட டெஸ்டுகளில் விளையாடிய 14 வீரர்களில் புஜாராவும் ஒருவர்.

  • இந்தியாவுக்காக டெஸ்டில் நெ. 3-ல் அதிக ரன்கள் மற்றும் அதிக சதங்கள் அடித்தவர்களில் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்து புஜாரா தான். ராகுல் டிராவிட் - 10,524 ரன்கள், சதங்கள் - 28; புஜாரா - 6,529 ரன்கள், சதங்கள் 18.

  • 4 டெஸ்டுகள் கொண்ட தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர்களில் டிராவிட்டுக்கு அடுத்து புஜாரா தான். 2002 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் டிராவிட் 1,336 பந்துகளையும் 2018-19 பிஜிடி தொடரில் புஜாரா 1,258 பந்துகளையும் எதிர்கொண்டுள்ளார்கள்.

  • முதல் தர கிரிக்கெட்டில் காவஸ்கர், சச்சின், டிராவிடுக்கு அடுத்ததாக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் புஜாராவுக்கு 4-வது இடம். 21,301 ரன்கள் எடுத்துள்ளார்.

Cheteshwar Pujara | Pujara | Pujara retires | Pujara records |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in