ஹங்கேரியில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய ஆடவர் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
முதல் 8 சுற்றுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 9-வது சுற்றில் டிரா செய்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 10-வது சுற்றில் அமெரிக்காவின் ஃபேபியானோவை இந்திய வீரர் குகேஷ் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து 10-வது சுற்றின் முடிவில் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. 17 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று கடைசி சுற்று நடைபெறவுள்ள நிலையில் இந்தியா தங்கம் வெல்வது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
இந்தியா இதுவரை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் தங்கம் வென்றதில்லை. எனவே இம்முறை தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது இந்தியா.