சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி கடந்த நவ. 05 அன்று தொடங்கியது.
கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 7 சுற்றுகள் நடைபெற்றது.
இதில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
மற்ற இந்திய வீரர்களான அர்ஜுன் 3-வது இடத்தையும், விதித் குஜ்ராதி 8-வது இடத்தையும் பிடித்தனர்.
இத்தொடரின் சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.