சிஎஸ்கே வெளியேறி, மும்பை பிளேஆஃப் செல்ல வாய்ப்புள்ளதா?

மும்பை அணி 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை அணி
மும்பை அணிANI

நடப்பு ஐபிஎல்-ல் இனி 16 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற மும்பை அணி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

ஐபிஎல்-ன் இன்றைய ஆட்டத்தில் மும்பை - சன்ரைசர்ஸ் அணிகள் மும்பையில் மோதுகின்றன. இதுவரை 54 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மும்பை அணி 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தையும் சேர்த்து இனி மும்பை அணிக்கு 3 ஆட்டங்கள் (சன்ரைசர்ஸ், கேகேஆர், லக்னௌ அணிகளுக்கு எதிராக) மீதமுள்ளது. இந்நிலையில் மிகப்பெரிய மாயாஜாலம் நடக்கும் பட்சத்தில் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வாய்புள்ளது.

* மும்பை அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் மிகப்பெரிய வெற்றிகளை அடைய வேண்டும். அவ்வாறு செய்தால் மும்பைக்கு ரன் ரேட் உயரும்.

* அடுத்ததாக, மற்ற அணிகளின் முடிவுகளும் மும்பைக்கு சாதகமாக இருக்க வேண்டும். தில்லி - ராஜஸ்தான் ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற வேண்டும், சன்ரைசர்ஸ் - லக்னௌ ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற வேண்டும்.

இதுபோல இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் மும்பைக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான், கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் 12 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்று முதல் 3 இடங்களைப் பிடிக்கும். அடுத்ததாக மும்பை, தில்லி, லக்னௌ, ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் தலா 12 புள்ளிகளுடன் இருக்கும்.

ஒருவேளை இவ்வாறு நடந்து ரன் ரேட்டிலும் மும்பை அணி முன்னிலையில் இருந்தால் மும்பை அணி 4-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். ஆனால், இவ்வாறு நடப்பது மிகவும் கடினமான ஒன்று. இருந்தும் இனி வரும் ஆட்டங்களை மும்பை ரசிகர்கள் நம்பிக்கையுடன் பார்க்க, இந்த கணக்கானது ஆறுதலாக அமையும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in