
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கு இதுவரை இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தங்களுடைய அணியை அறிவித்துள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியும் துபாயில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெறும் பட்சத்தில் அதுவும் துபாயில் நடைபெறும்.
இந்தப் போட்டி பிப்ரவரி 19 அன்று கராச்சியில் தொடங்குகிறது. இறுதி ஆட்டம் மார்ச் 9 அன்று நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் 15 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பாகிஸ்தானில் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சியில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
8 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் கராச்சியில் பிப்ரவரி 19 அன்று மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான அணிகளைச் சமர்ப்பிக்க ஜனவரி 12 கடைசி நாள்.
இங்கிலாந்து
ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேகப் பெத்தெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியம் லிவிங்ஸ்டன், அடில் ரஷித், ஜோ ரூட், சகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட்.
நியூசிலாந்து
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்ரி, டாம் லேதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், கிளென் ஃபிளிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ், நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்.
வங்கதேசம்
நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), சௌமியா சர்கார், தன்ஸித் ஹசன், தௌஹித் ஹிரிதாய், முஷ்பிகுர் ரஹீம், மஹமதுல்லா, ஜேகர் அலி, ரிஷத் ஹொசைன், டஸ்கின் அஹமது, நசும் அஹமது, முஸ்தபிஸூர் ரஹ்மான், பர்வேஸ் ஹொசைன் எமோன், மெஹிதி ஹசன் மிராஸ், தன்ஸிம் ஹசன் சகிப், நஹித் ராணா.
ஆஸ்திரேலியா
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நேதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸாம்பா.
தென்னாப்பிரிக்கா
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, மார்கோ யான்சென், ஹெயின்ரிக் கிளாஸென், கேஷவ் மஹாராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, அன்ரிக் நோர்க்கியா, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், தப்ரைஸ் ஷம்ஸி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ரசி வான் டர் டுசன்.