
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டமாகக் கருதப்படும் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணி இரு புள்ளிகளுடனும் பாகிஸ்தான் ஒரு தோல்வியுடனும் இந்த ஆட்டத்துக்கு வருகின்றன.
வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் முஹமது ரிஸ்வான், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி இம்முறையும் இலக்கை விரட்டுகிறது. பாகிஸ்தானில் ஃபகார் ஸமானுக்குப் பதில் இமாம்-உல்-ஹக் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் ஆட்டத்தில் விளையாடிய ஆடுகளத்தைப் போலவ இந்த ஆடுகளமும் இருப்பதாக ரோஹித் சர்மா தெரிவித்தார். இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
பாகிஸ்தான்
இமாம்-உல்-ஹக், பாபர் ஆஸம், சௌத் ஷகீல், முஹமது ரிஸ்வான் (கேப்டன்) (விக்கெட் கீப்பர்), தய்யப் தாஹிர், சல்மான் ஆகா, குஷ்தில் ஷா, ஷஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், அப்ரர் அஹமது.
இந்தியா
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், அக்ஷர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முஹமது ஷமி, குல்தீப் யாதவ்.