சாம்பியன்ஸ் கோப்பை: பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுப்பு?

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கோப்பையிலும் இந்திய அணி பங்கேற்க மறுத்ததால், இந்தியாவின் ஆட்டங்கள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுப்பு?
பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுப்பு?ANI

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

2025 சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்தியா மோதும் ஆட்டங்களை மட்டும் இலங்கை அல்லது துபாயில் நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடைசியாக 2008-ல் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று எந்த ஒரு தொடரிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் 2025-ல் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி விளையாடுவது குறித்து ஆரம்பம் முதல் குழப்பமாகவே இருந்தது. இந்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் இந்தியா மோதும் ஆட்டங்களை மட்டும் இலங்கை அல்லது துபாயில் நடத்த கோரிக்கை வைத்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கோப்பையிலும் இந்திய அணி பங்கேற்க மறுத்ததால், இந்தியாவின் ஆட்டங்கள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டது.

முன்னதாக, 2017-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது பாகிஸ்தான் அணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in