கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: 5-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் வெற்றி

புள்ளிகள் பட்டியலில் பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.
கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்
கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்@FIDE

கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 5-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

கனடாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 8 பேர் என மொத்தம் 16 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இப்போட்டி ஏப்ரல் 3 அன்று தொடங்கியது. இந்தியாவிலிருந்து ஆண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா, டி. குகேஷ், விதித் குஜராத்தி மற்றும் பெண்கள் பிரிவில் வைஷாலி, கொனேரு ஹம்பி என 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

நடப்பு உலக சாம்பியனுடன் மோதும் வீரர் மற்றும் வீராங்கனையை முடிவு செய்யும் இப்போட்டி ஏப்ரல் 23 வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் 5 சுற்றுகள் முடிவடைந்தன. 5-வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஆண்கள் பிரிவில் டி.குகேஷ் 3.5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் முறையே 2.5 மற்றும் 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5 மற்றும் 6-வது இடத்தில் உள்ளனர்.

பெண்கள் பிரிவில் வைஷாலி 2.5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். கொனேரு ஹம்பி 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளார்.

ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். மொத்தம் 14 சுற்றுகள் நடைபெறும். இப்போட்டியின் முடிவில் முதலிடம் பிடிப்பவர்கள் 2024-ம் ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவார்கள்.

இந்நிலையில் 5 சுற்றுகள் முடிந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த டி.குகேஷ் நல்ல நிலைமையில் உள்ளார்.

ஆண்கள் பிரிவில் நெப்போவும், பெண்கள் பிரிவில் ஜோங்கி டானும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in