மும்பையின் முதல் மூன்று ஆட்டங்களைத் தவறவிடும் பும்ரா!

இனி வரும் காலங்களில் முன்பு போல எல்லா சர்வதேச ஆட்டங்களிலும் அவரால் விளையாட முடியுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
மும்பையின் முதல் மூன்று ஆட்டங்களைத் தவறவிடும் பும்ரா!
ANI
1 min read

காயம் காரணமாக சிகிச்சையில் இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, இந்த வருட ஐபிஎல்-லில் மும்பை அணிக்கான ஆரம்ப ஆட்டங்களில் பங்கேற்க வாய்ப்பில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

பார்டர் காவஸ்கர் தொடரில் காயமடைந்த பும்ரா, தற்போது முதுகு வலிக்கான சிகிச்சையில் உள்ளார். இதனால் ஜனவரி முதல் சாம்பியன்ஸ் கோப்பை உள்பட எந்தவொரு ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாக குணமாகாததால் மார்ச் மாதம் வரை பும்ராவால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மார்ச் மாதம் மும்பை அணி விளையாடவுள்ள மூன்று ஆட்டங்களிலும் பும்ராவால் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. இது மும்பை அணிக்குப் பலத்த பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான உடற்தகுதியை அடையும்பட்சத்தில் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து மும்பை அணியில் இணைந்து ஐபிஎல் ஆட்டங்களில் பும்ரா மீண்டும் விளையாடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதுகு வலி காயம் காரணமாக மார்ச் 2023-ல் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் பும்ரா. இப்போது மீண்டும் முதுகு வலிக்கு அவர் சிகிச்சை எடுத்து வருவதால் இனி வரும் காலங்களில் முன்பு போல எல்லா சர்வதேச ஆட்டங்களிலும் அவரால் விளையாட முடியுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இரு டெஸ்டுகளுக்கு மேல் பும்ரா தொடர்ந்து விளையாடக் கூடாது. மீண்டும் முதுகுப் பகுதியில், அறுவை சிகிச்சை செய்த அதே இடத்தில் பும்ராவுக்குக் காயம் உண்டானால் பிறகு ஒட்டுமொத்தமாக விளையாட முடியாமல் கூடப் போகலாம் என்று பும்ராவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஷேன் பாண்ட்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in