நெ.1 டெஸ்ட் பேட்டர் ஹாரி புரூக்!

நெ.1 டெஸ்ட் பேட்டர் ஹாரி புரூக்!

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
Published on

ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் நெ.1 பேட்டராக முன்னேறியுள்ளார் இங்கிலாந்தின் ஹாரி புரூக்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நெ.1 பேட்டராக இருந்த ஜோ ரூட்டைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஹாரி புரூக்!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 123, 55 ரன்கள் குவித்ததால் இந்தப் பெருமையை புரூக் பெற்றுள்ளார். முதல் டெஸ்டில் 171 ரன்களை அவர் எடுத்திருந்தார்.

2-வது டெஸ்டில் ஜோ ரூட் சதமடித்த போதும் ஒரு புள்ளி இடைவெளியில் அவரை முந்தியுள்ளார் புரூக். 3-வது டெஸ்டில் இருவரில் யார் அதிக ரன்கள் எடுத்தாலும் நெ.1 இடம் மீண்டும் நிச்சயம்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in