சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதியைப் பாராட்டிய பிராவோ!

எனது 2-வது தாய்நாடான சென்னையில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதியைப் பாராட்டிய பிராவோ!
1 min read

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காக சிஎஸ்கே முன்னாள் வீரர் பிராவோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்களில் சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது.

இது தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடைபெற்ற இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயமாகும்.

இந்த ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தில், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணியைச் சேர்ந்த அலிபாய் முதலிடமும், அகமதாபாத் ரேசர்ஸ் அணியைச் சேர்ந்த திவி நந்தன் 2-வது இடமும், பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ் அணியைச் சேர்ந்த ஜேடன் பாரியாட் 3-வது இடமும் பெற்றனர். இவர்களுக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காக சிஎஸ்கே முன்னாள் வீரர் பிராவோ அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டியுள்ளார்.

இது குறித்த இன்ஸ்டாகிராம் பதிவில், “எனது 2-வது தாய்நாடான சென்னையில் இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயம் நடைபெற்றது. இதனை நடத்திய உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in