
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தொண்டை புற்றுநோயை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 108 டெஸ்ட் மற்றும் 36 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர் ஜெஃப்ரி பாய்காட். கடந்த 2002-ல் இவருக்கு கீமோதெரபி மூலம் தொண்டை புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த மே மாதத்தில் பாய்காட் மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் பாய்காட் தொண்டை புற்றுநோயை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து பாய்காட்டின் மகள் எம்மா, “எனது தந்தைக்கு தொண்டை புற்றுநோயை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நான் அவரை இனி பார்க்கவில்லை, ஆனால் அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்துப் பதிவிட என்னிடம் தெரிவித்தார்” என்று நேற்று முன்தினம் (ஜூலை 17) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.