பாக்ஸிங் டே டெஸ்ட்: வரலாறும் மகத்துவமும்!

1989-ல் மட்டும் ஆஸ்திரேலியா, இலங்கை இடையே டெஸ்டுக்கு பதில் ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்ANI
1 min read

பாக்ஸிங் டே

கிறிஸ்துமஸுக்கு மறுநாளான டிசம்பர் 26 பாக்ஸிங் டே என்று அழைக்கப்படும். இது பிரிட்டனில் பின்பற்றப்படும் வழக்கம். இதன் காரணமாக பிரிட்டன் ஆட்சிபுரிந்த நாடுகளிலும் இந்த வழக்கம் பரவியது.

பெயர் காரணம்

கிறிஸ்துமஸ் பரிசுப் பெட்டி என்பதிலிருந்து (ஆங்கிலத்தில் பாக்ஸிங்) பாக்ஸிங் டே என்ற பெயர் உதித்தது. ஆண்டுதோறும் உழைப்பைச் செலுத்தி வரும் தொழிலாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பரிசுகளைக் கொண்ட பெட்டி ஒன்று வழங்குவது மரபு வழக்கம். கிரெட் பிரிட்டனில் தொடங்கிய இந்த வழக்கம் உலகம் முழுக்க பரவியது.

பாக்ஸிங் டே அன்று முதல்தர ஆட்டம்

1865 முதல் 1970 வரை ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் டே நாளன்று விக்டோரியா மற்றும் நியூ சௌத் வேல்ஸ் இடையே முதல்தர ஆட்டம் தொடங்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு வந்தது. பிற்பாடு டெஸ்டிலும் இந்த நடைமுறை தொடங்கியது.

முதல் பாக்ஸிங் டே டெஸ்ட்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே 1950-ல் பாக்ஸிங் டே தினத்தன்று முதல் டெஸ்ட் நடைபெற்றது. டிசம்பர் 26 அன்று அதாவது பாக்ஸிங் டே நாளன்று நடைபெறும் டெஸ்டுகள், பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய மரபு

ஆஸ்திரேலியாவில் 1952, 1968, 1974 மற்றும் 1975 ஆண்டுகளில் பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்றது. 1967, 1972 மற்றும் 1976-ல் அடிலெய்டில் நடைபெற்றது.

1980-க்குப் பிறகு மெல்போர்னில் நடத்தப்படுவதே பாரம்பரியமாக மாறிவிட்டது. 1989-ல் மட்டும் ஆஸ்திரேலியா, இலங்கை இடையே டெஸ்டுக்கு பதில் ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது.

அதே வேளையில், பாக்ஸிங் டே நாளன்று டெஸ்ட் தொடங்க வேண்டும் என்றில்லாமல், பாக்ஸிங் டே நாளன்று டெஸ்டின் ஏதேனும் ஒரு நாள் நடக்கும் வகையில் அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வந்தன.

1995-க்குப் பிறகு இலங்கையுடனான டெஸ்ட் முதலே மெல்போர்னில் பாக்ஸிங் டே நாளன்று டெஸ்ட் தொடங்கும் வகையில் அட்டவணைகள் தயாரிக்கப்படத் தொடங்கின.

வேறெந்த நாடுகளில் எல்லாம் பாக்ஸிங் டே டெஸ்ட்

ஆஸ்திரேலியா தவிர்த்து தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தில் பாக்ஸிங் டே நாளன்று கிரிக்கெட் நடத்துவது வழக்கமானது. இங்கிலாந்தில் டிசம்பர் மாதம் விளையாட்டுப் போட்டிகளுக்கு உகந்த காலம் கிடையாது (உறைபனிக் காலம்) என்பதால், அங்கு பாக்ஸிங் டே டெஸ்ட் வழக்கம் கடைபிடிக்கப்படுவதில்லை.

2024

இம்முறை ஆஸ்திரேலியா - இந்தியா, தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான், ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் இடையே பாக்ஸிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in