இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி முழங்கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, அதன்பிறகு இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலும் கணுக்கால் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை.
இதைத் தொடர்ந்து காயத்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஷமி, சமீபத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார்.
இந்நிலையில் ஷமி முழங்கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காயம் குணமடைய 6-8 வாரங்கள் வரை ஆகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், நவம்பரில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஷமி பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.