முதல் டெஸ்ட்: 150 ரன்களுக்குச் சுருண்ட இந்திய அணி!

ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் டெஸ்ட்: 150 ரன்களுக்குச் சுருண்ட இந்திய அணி!
@icc
1 min read

பெர்த் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தும் 150 ரன்களுக்குச் சுருண்டுள்ளது இந்திய அணி.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டெஸ்டுகள் கொண்ட பிஜிடி தொடர் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் நிதிஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா அறிமுகம். துருவ் ஜுரெல், கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் தேர்வானார்கள். அஸ்வின், ஜடேஜாவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஒரே சுழற்பந்து வீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆரம்பம் முதல் வேகப்பந்துவீச்சில் இந்திய பேட்டர்கள் தடுமாறினார்கள். ஜெயிஸ்வால், படிக்கல் ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேற, அதிகம் எதிர்பார்த்த கோலி 5 ரன்களிலும் நிதானமாக விளையாடிய கேஎல் ராகுல் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளையில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்தது.

இதன் பிறகு ஜுரெல் 11, வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற ரிஷப் பந்த், நிதிஷ் ரெட்டி கூட்டணி அமைத்து இந்தியாவை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சேர்ந்து 48 ரன்கள் சேர்த்தனர்.

ரிஷப் பந்த் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தனது அறிமுக டெஸ்டில் விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்க்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்குச் சுருண்டது.

ஆஸி. அணி தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in