2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி முன்னிலை!

உணவு இடைவேளையில் ஆஸி. அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.
2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி முன்னிலை!
ANI
1 min read

பிஜிடி தொடரின் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி முன்னிலை பெற்று வலுவான நிலையில் விளையாடி வருகிறது.

பெர்த் டெஸ்டில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் நேற்று (டிச.6) அடிலெய்டில் 2-வது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள். படிக்கல், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரெலுக்கு பதிலாக ரோஹித் சர்மா, அஸ்வின், கில் ஆகியோர் இடம்பெற்றனர்.

ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக ஹேசில்வுட் விலக, அவருக்குப் பதிலாக ஸ்காட் போலண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

முதல் இன்னிங்ஸில் ஸ்டார்க்கின் மிரட்டலான பந்துவீச்சில் இந்திய அணி 180 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார். ராகுலும் கில்லும் முறையே 37, 31 ரன்களில் வெளியேறினர். மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் பிறகு விளையாடிய ஆஸி. அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. மெக்ஸ்வீனி 38 ரன்களிலும், லபுஷேன் 20 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. மெக்ஸ்வீனியை 39 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித்தை 2 ரன்களிலும் ஆரம்பத்திலேயே வெளியேற்றினார் பும்ரா.

இதைத் தொடர்ந்து லபுஷேன் - டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான கூட்டணியால் ஆஸி. அணி முன்னிலை பெற்றது. 64 ரன்களில் லபுஷேன் நிதிஷ் ரெட்டி பந்தில் ஆட்டமிழக்க மறுமுனையில் அரைசதம் அடித்து களத்தில் உள்ளார் டிராவிஸ் ஹெட்.

2-வது நாளின் உணவு இடைவேளையில் ஆஸி. அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 11 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in