வங்கதேசம், இங்கிலாந்து தொடர்களுக்கான அட்டவணையில் மாற்றம் செய்த பிசிசிஐ!

14 ஆண்டுகளுக்குப் பிறகு குவாலியரில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
வங்கதேசம், இங்கிலாந்து தொடர்களுக்கான அட்டவணையில் மாற்றம்
வங்கதேசம், இங்கிலாந்து தொடர்களுக்கான அட்டவணையில் மாற்றம்
1 min read

தரம்சாலாவில் மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டி20 ஆட்டம் குவாலியருக்கு மாற்றப்பட்டுள்ளது.

2024-25 உள்ளூர் பருவத்துக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை கடந்த ஜூலை மாதத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அந்த வகையில் இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் செப்டம்பர் 19 அன்று தொடங்குகிறது.

இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் முடிந்தவுடன், மூன்று டி20 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. இதில் முதல் டி20 ஆட்டம் தரம்சாலாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தரம்சாலாவில் மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஆட்டம் குவாலியருக்கு மாற்றப்பட்டுள்ளது.

குவாலியரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீமந்த் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

கடைசியாக 2010-ல் இந்தியா - தெ.ஆ. இடையிலான ஒருநாள் ஆட்டம் குவாலியரில் நடைபெற்றது. இதில், இந்திய வீரர் சச்சின் சர்வதேச அளவில் முதல் இரட்டைச் சதத்தை விளாசினார்.

எனவே, 14 ஆண்டுகளுக்குப் பிறகு குவாலியரில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் இரு டி20 ஆட்டங்கள் சென்னை, கொல்கத்தாவில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது முதல் இரு டி20 ஆட்டங்கள் முறையே கொல்கத்தா, சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை கருத்தில் கொண்டு கொல்கத்தா காவல் துறையினர் இடமாற்றம் குறித்து கோரிக்கை வைத்ததால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா - வங்கதேசம், 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 ஆட்டங்கள் (செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 12 வரை)

முதல் டெஸ்ட், செப்டம்பர் 19, சென்னை

2-வது டெஸ்ட், செப்டம்பர் 27, கான்பூர்

முதல் டி20, அக்டோபர் 6, குவாலியர்

2-வது டி20, அக்டோபர் 9, தில்லி

3-வது டி20, அக்டோபர் 12, ஹைதராபாத்

இந்தியா - இங்கிலாந்து, 5 டி20 3 ஒருநாள் ஆட்டங்கள் (ஜனவரி 22 - பிப்ரவரி 12)

முதல் டி20, ஜனவரி 22, கொல்கத்தா

2-வது டி20, ஜனவரி 25, சென்னை

3-வது டி20, ஜனவரி 28, ராஜ்கோட்

4-வது டி20, ஜனவரி 31, புனே

5-வது டி20, பிப்ரவரி 2, மும்பை

முதல் ஒருநாள், பிப்ரவரி 6, நாக்பூர்

2-வது ஒருநாள், பிப்ரவரி 9, கட்டாக்

3-வது ஒருநாள், பிப்ரவரி 12, அஹமதாபாத்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in