ரோஹித்திடமிருந்து ஷ்ரேயஸ் வசம் செல்கிறதா கேப்டன் பொறுப்பு?: பிசிசிஐ செயலர் விளக்கம்! | BCCI

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியின்போது இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தவர் ஷுப்மன் கில்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவிடமிருந்து ஷ்ரேயஸ் ஐயர் வசம் செல்வதாக வெளியான தகவல் குறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா விளக்கமளித்துள்ளார்.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மூத்த வீரர்களிடமிருந்து அடுத்த தலைமுறை வீரர்கள் வசம் நகர்ந்து வருகிறது. டெஸ்டிலிருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, ஆர் அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளார்கள். டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்று இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்தினார் ஷுப்மன் கில்.

இதைத் தொடர்ந்து, ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக பதவி உயர்வு பெற்றார் கில். எனினும், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெறவில்லை. சமூக ஊடகங்களில் முன்னாள் வீரர்கள் உள்பட ரசிகர்கள் பலர் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெறாதது குறித்து விவாதித்து வருகிறார்கள்.

இதனிடையே தான், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவிடமிருந்து ஷ்ரேயஸ் ஐயர் வசம் ஒப்படைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து 38 வயதுடைய ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியின் வெற்றிக்குப் பிறகு அவர் அறிவித்தார். ரோஹித் சர்மாவின் வயதைக் கருத்தில் கொண்டு, 2027 உலகக் கோப்பையை மனதில் வைத்து பிசிசிஐ இந்த முடிவை எடுக்கலாம் எனப் பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில் தான் பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் இதுபற்றி பிரத்யேகமாகக் கூறிய அவர், "இந்தச் செய்தி எனக்குப் புதிதாக உள்ளது. இது மாதிரியான ஆலோசனைகள் எதுவும் நடைபெறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியின்போது இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தவர் ஷுப்மன் கில்.

BCCI | Team India | ODI | ODI Squad | Indian Captain | BCCI Secretary Devajit Saikia | BCCI Secretary | Shubman Gill | Shreyas Iyer | Rohit Sharma

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in