இந்திய ஆடவர், மகளிர் மற்றும் இளையோர் அணிகளுக்கான தேர்வுக் குழுவில் காலியாகும் பதவிகளுக்கு பிசிசிஐ விண்ணப்பம் கோரியுள்ளது.
இந்திய ஆடவர் அணியின் தேர்வுக் குழுவில் அஜித் அகர்கர் தலைமை பொறுப்பு வகிக்கிறார். இந்தக் குழுவில் மொத்தம் 4 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள். அஜித் அகர்கர், ஷிவ் சுந்தர் தாஸ் (மத்திய மண்டலம்), சுப்ரோதோ பானர்ஜி (கிழக்கு மண்டலம்), அஜய் ரத்ரா (வடக்கு மண்டலம்) மற்றும் ஸ்ரீதரன் சரத் (தெற்கு மண்டலம்) ஆகியோர் இந்திய ஆடவர் அணியின் தேர்வுக் குழு உறுப்பினர்களாக உள்ளார்கள்.
அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதாக வியாழக்கிழமை தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஆடவர் அணியின் தேர்வுக் குழுவில் காலியாகும் இரு இடங்களுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது பிசிசிஐ.
இந்திய ஆடவர் அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதிகள்:
குறைந்தபட்சம் 7 டெஸ்டுகளில் அல்லது 30 முதல்தர ஆட்டங்களில் அல்லது 10 சர்வதேச ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 20 முதல்தர ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
எந்தவொரு கிரிக்கெட் சங்கத்திலும் மொத்தம் 5 ஆண்டுகளுக்கு உறுப்பினராக இருந்திருக்க் கூடாது.
மகளிர் அணிக்கான தேர்வுக் குழு:
இந்திய மகளிர் அணிக்கான தேர்வுக் குழுவில் நீது டேவிட் தலைமையில் ஆர்த்தி வைத்யா, ரேணு மார்கரேட், வெங்கட்சர் கல்பனா மற்றும் ஷ்யாமா ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
இதில் 4 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது பிசிசிஐ.
இந்திய மகளிர் அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதிகள்:
இந்திய மகளிர் அணிக்காக விளையாடிய முன்னாள் வீரராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
எந்தவொரு கிரிக்கெட் சங்கத்திலும் மொத்தம் 5 ஆண்டுகளுக்கு உறுப்பினராக இருந்திருக்க் கூடாது.
இளையோர் அணிக்கானத் தேர்வுக் குழு
இந்திய இளையோர் அணியைத் தேர்வு செய்யும் குழுவில் ஒரு காலிப் பணியிடம் உள்ளது. இதற்கான விண்ணப்பத்தையும் பிசிசிஐ கோரியுள்ளது.
இளையோர் அணியைத் தேர்வு செய்வதற்கானத் தேர்வுக் குழுவில் விஎஸ் திலக் நாயுடு தலைமை வகிக்கிறார். இதில் பதிக் படேல், ராணாதேவ் போஸ், கிஷன் மோகன் மற்றும் ஹர்விந்தர் சிங் சோதி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளார்கள்.
இந்திய இளையோர் அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதிகள்:
குறைந்தபட்சம் 25 முதல் தர ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
எந்தவொரு கிரிக்கெட் சங்கத்திலும் மொத்தம் 5 ஆண்டுகளுக்கு உறுப்பினராக இருந்திருக்க் கூடாது.
BCCI | BCCI Selection Committee | Ajit Agarkar |