
பிசிசிஐ இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டுள்ளார்.
2019-ல் பிசிசிஐயின் செயலாளராக இளம் வயதில் பொறுப்பேற்று சாதனை படைத்த ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக கடந்த டிச. 1 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனால் பிசிசிஐயின் அடுத்த செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பிசிசிஐயின் இணை செயலாளராக இருந்த தேவஜித் சைகியா, தற்போது பிசிசிஐயின் இடைக்கால செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான தேவஜித் சைகியாவின் பதவிக்காலம் அடுத்தாண்டு செப்டம்பர் வரை தொடரும் என்று கூறப்படுகிறது.