தென்னாப்பிரிக்க டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 நவம்பர் 8 அன்று டர்பனில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ரமண்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், விஜயகுமார் வைஷாக், அவேஷ் கான், யஷ் தயல்.
மயங்க் யாதவ் மற்றும் ஷிவம் துபே காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. வலது தோள்பட்டை காயத்துக்கு நீண்ட காலத் தீர்வு காண்பதற்காக பிசிசிஐ மையத்தில் இருப்பதால் ரியான் பராக் தேர்வு செய்யப்படவில்லை.
ஆஸ்திரேலியாவுடனான பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் 22 அன்று பெர்த்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தொடக்க வீரராக அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார். முஹமது ஷமி சேர்க்கப்படவில்லை. நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெயிஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முஹமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.
மாற்று வீரர்கள்:
முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அஹமது.
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பிறகு, காயத்துக்கு நீண்ட காலத் தீர்வு காண்பதற்காக பிசிசிஐ மையம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதால் குல்தீப் யாதவ் இந்தத் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.