ஹைதராபாத் தொழிலதிபரிடம் கவனம்: ஐபிஎல் எச்சரிக்கை

விலை உயர்ந்த பொருள்களைக் காட்டி வலை விரித்து அதில் சிக்கவைக்கலாம் என்பதால்...
ஹைதராபாத் தொழிலதிபரிடம் கவனம்: ஐபிஎல் எச்சரிக்கை
1 min read

ஹைதராபாத் தொழிலதிபரிடம் கவனமாக இருக்குமாறு ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தொடங்கி வர்ணனையாளர்கள் வரை அனைவருக்கும் பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேட்ச் ஃபிக்சிங் உள்ளிட்ட குற்றச் செயல்களைச் செய்யக்கூடியவர்களுடன் தொடர்பில் இருக்கும் ஹைதராபாத் தொழிலதிபர் ஒருவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பவர்களுடன் நட்புறவை உருவாக்க முயற்சித்து வருவதாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பாதுகாப்புப் பிரிவு சந்தேகிக்கிறது. கடந்த காலங்களில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வரலாறு கொண்டவர் அந்தத் தொழிலதிபர் என்று பிசிசிஐ கருதுகிறது.

எனவே, ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அனைத்துத் தரப்பினரும் கவனமாக இருக்குமாறு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிமையாளர்கள், வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள் மற்றும் வர்ணனையாளர்கள் உள்பட அனைவருக்கும் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விலை உயர்ந்த பொருள்களைக் காட்டி வலை விரித்து அதில் சிக்கவைக்கலாம் என்பதால், அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் ரசிகர் என்கிற போர்வையில் ஐபிஎல் வீரர்களிடம் நெருக்கம் காட்ட முயற்சித்து வருவதாகவும் வீரர்களின் நண்பராக முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளை தனிப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைக்கத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. இவர் ஏற்கெனவே வீரர்கள் தங்கும் விடுதிகளில் தென்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வீரர்கள் மற்றும் வீரர்களுடையக் குடும்பத்தினருக்கு பரிசுப் பொருள்களைக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஐபிஎல் போட்டியில் பங்கெடுக்கும் அனைவரும் எவ்வித வலையிலும் சிக்காமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை ஒன்றை எல்லாத் தரப்புக்கும் அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட தொழிலதிபரிடம் ஏதேனும் சந்திப்பு அல்லது உரையாடல்கள் நிகழ்ந்திருந்தால், அதை உடனடியாகத் தெரிவிக்குமாறும் பிசிசிஐ சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in