
சாம்பியன்ஸ் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டெம்பா பவுமா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் அன்ரிக் நோர்க்கியா, லுங்கி என்கிடி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். இருவரும் காயம் காரணமாக நீண்ட காலமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்தார்கள்.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 21 அன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா.
2023 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை தென்னாப்பிரிக்கா முன்னேறியது. இதில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 10 பேர் சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
தென்னாப்பிரிக்க அணி
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஸோர்ஸி, மார்கோ யான்சென், ஹெயின்ரிக் கிளாஸென், கேஷவ் மஹாராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி என்கிடி, அன்ரிக் நோர்க்கியா, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், தப்ரைஸ் ஷம்ஸி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ரசி வான் டர் டுசன்.