
டி20 வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது பரோடா அணி.
சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் சிக்கிம் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 349 ரன்கள் குவித்தது பரோடா அணி.
அந்த அணியைச் சேர்ந்த பானு பானியா 51 பந்துகளில் 15 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து எதிரணி பந்துவீச்சாளர்களை மிரளவைத்தார்.
349 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது பரோடா.
முன்னதாக, ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது பரோடா. மேலும், ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் எடுத்த அணி என்ற சாதனியையும் பரோடா அணி படைத்துள்ளது.
சிக்கிமுக்கு எதிரான ஆட்டத்தில் மொத்தமாக 37 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இந்த ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் சிக்கிம் அணி 86 ரன்கள் மட்டுமே எடுக்க பரோடா அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.