இந்திய வீரர் பரிந்தர் ஸ்ரான் ஓய்வு

எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் அறிமுகமானார்.
இந்திய வீரர் பரிந்தர் ஸ்ரான் ஓய்வு
1 min read

இந்திய இடக்கை வேகப்பந்துவீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

31 வயதுடைய ஸ்ரான் இந்தியாவுக்காக 6 ஒருநாள் மற்றும் இரு டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

விவசாயி ஒருவரின் மகனான இவர் ஹரியானாவில் குத்துச்சண்டை கிளப்பில் பயிற்சி பெற்று வந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு கிரிக்கெட்டுக்கு மாறினார்.

2009-ல் குத்துச்சண்டையைக் கைவிட்ட இவர் 2011-ல் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமானார்.

2015 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த வருடமே எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணிக்காக அறிமுகமானார். ஜூன் 2016-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமானார்.

கடைசியாக 2021-க்கு பிறகு எந்தவொரு போட்டிகளிலும் இவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், ஓய்வு பெற இது சரியான என்று இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

6 ஒருநாள் ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளையும், இரு சர்வதேச டி20 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 18 முதல் தர ஆட்டங்களில் 47 விக்கெட்டுகளையும், 31 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் 45 விக்கெட்டுகளையும், 48 டி20 ஆட்டங்களில் 45 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in