பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்குப் புதிய தலைமைப் பயிற்சியாளர்!

ஜேசன் கில்லெஸ்பி விலகிய பிறகு, பாகிஸ்தான் டெஸ்ட் அணி முழு நேர தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் இருந்து வருகிறது.
பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்குப் புதிய தலைமைப் பயிற்சியாளர்!
படம்: https://x.com/AzharMahmood11
1 min read

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக (பொறுப்பு) அசார் மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்தாண்டு நியூசிலாந்துக்குப் பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இந்தப் பயணத்தின்போது இடைக்கால ஏற்பாடாக அந்த அணியின் உதவிப் பயிற்சியாளராக அசார் மஹ்மூத் இருந்து வருகிறார். பாகிஸ்தான் அணியின் உதவிப் பயிற்சியாளராக உள்ளார்.

அசார் மஹ்மூதின் தற்போதைய ஒப்பந்தக் காலம் நிறைவடையும் வரை தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை அசார் மஹ்மூத் வகிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜேசன் கில்லெஸ்பி விலகியதைத் தொடர்ந்து, டெஸ்ட் அணி முழு நேர தலைமைப் பயிற்சியாளர் இல்லாமல் இருந்து வருகிறது. முந்தைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரு டெஸ்டுகள் கொண்ட தொடர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் அக்யூப் ஜாவெத் இடைக்கால ஏற்பாடாக தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட்டார்.

அக்டோபர் 2024-ல் கேரி கிர்ஸ்டன் வெள்ளைப் பந்து அணிகளின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, வெள்ளைப் பந்து அணிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராகவும் ஜாவெத் செயல்பட்டார்.

பாகிஸ்தானின் வெள்ளைப் பந்து அணிகளின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு தற்போது மைக் ஹெஸ்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக (பொறுப்பு) அசார் மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அசார் மஹ்மூத் பாகிஸ்தானுக்காக 21 டெஸ்ட், 143 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 900 ரன்கள் மற்றும் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 1,521 ரன்கள் மற்றும் 123 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in