
இங்கிலாந்து பயணத்துக்கான ஆயுஷ் மாத்ரே தலைமையிலான யு-19 இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை இங்கிலாந்துக்குப் பயணம் செய்கிறது. இந்தப் பயணத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 ஓவர் பயிற்சி ஆட்டம், 5 ஆட்டங்கள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடர் மற்றும் இரு நான்கு நாள் ஆட்டத்தில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று காலை வெளியிட்டுள்ளது. ஆயுஷ் மாத்ரே கேப்டனாகவும் அபிக்யான் குண்டு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஐபிஎல் போட்டியில் கலக்கிய 14 வயது வைபவ் சூர்யவன்ஷி இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யு-19 இந்திய அணி
ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சின் சாவ்டா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்எஸ் அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முஹமது எனான், ஆதித்யா ராணா, அன்மோல்ஜீத் சிங்.
மாற்று வீரர்கள்
நமன் புஷ்பக், டி தீபேஷ், வேதாந்த் திரிவேதி, விகல்ப் திவாரி, அலங்கிரித் ரபோல் (விக்கெட் கீப்பர்).
அட்டவணை
ஜூன் 24 - 50 ஓவர் பயிற்சி ஆட்டம்
ஜூன் 27 - முதல் ஒருநாள்
ஜூன் 30 - 2-வது ஒருநாள்
ஜூலை 2 - 3-வது ஒருநாள்
ஜூலை 5 - 4-வது ஒருநாள்
ஜூலை 7 - 5-வது ஒருநாள்
ஜூலை 12 முதல் ஜூலை 15 வரை - முதல் நான்கு நாள் ஆட்டம்
ஜூலை 20 முதல் ஜூலை 23 வரை - 2-வது நான்கு நாள் ஆட்டம்
ஐபிஎல் 2025 போட்டியில் 17 வயது ஆயுஷ் மாத்ரே 6 ஆட்டங்களில் 34.33 சராசரியில் 187.27 ஸ்டிரைக் ரேட்டில் 206 ரன்கள் விளாசியுள்ளார். 14 வயது வைபவ் சூர்யவன்ஷி 7 ஆட்டங்களில் 36 சராசரியில் 206.55 ஸ்டிரைக் ரேட்டில் 252 ரன்கள் விளாசியுள்ளார்.