பாராலிம்பிக்ஸில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம், பாராலிம்பிக்ஸில் இரு தங்கப் பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
249.7 புள்ளிகள் பெற்ற அவனி லேகரா தங்கம் வென்றார். இதே பிரிவில் 228.7 புள்ளிகள் பெற்ற மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர் அவனி லேகரா. டோக்கியோவில் 249.6 புள்ளிகளைப் பெற்ற இவர், பாரிஸில் 249.7 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
22 வயதுடைய அவானி ஒட்டுமொத்தமாக வெல்லும் மூன்றாவது பதக்கம் இது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 50 மீ ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்றார்.