
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இந்திய கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்தார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் காவஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது.
டிசம்பர் 6 அன்று அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கு முன்பு நவம்பர் 30 முதல் கான்பெராவில் நடைபெறும் பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது.
பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுகிறார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இந்திய வீரர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியின் வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
ஜேக் எட்வர்ட்ஸ் தலைமையிலான பிரதமர் லெவன் அணியினரையும் அந்தோணி அல்பனீஸ் சந்தித்தார்.
இந்திய வீரர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய புகைப்படங்களை ஆஸ்திரேலிய பிரதமர் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியதுபோல, ஆஸ்திரேலியா வெற்றி பெற ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.