சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி: ஆஸி. பேட்டிங் தேர்வு

இந்திய அணி 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியின் முதல் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் மோதுகின்றன. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து 14-வது முறையாக டாஸில் தோற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக ஏற்கெனவே விலகினார். இவருக்குப் பதில் கூப்பர் கான்லி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்செர் ஜான்சனுக்குப் பதில் தன்வீர் சங்கா சேர்க்கப்பட்டுள்ளார். இருவருமே பந்தை சுழற்றக்கூடியவர்கள்.

டாஸ் வென்றிருந்தால், எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருந்ததாக ரோஹித் சர்மா தெரிவித்தார். எனவே, டாஸில் தோற்றது நல்லது என ரோஹித் சர்மா தெரிவித்தார். மேலும், இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. வருண் சக்ரவர்த்தி தனது மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தை சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் விளையாடுகிறார்.

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இரு அணிகளும் சுழற்பந்துவீச்சுப் படையுடன் களமிறங்கியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in