ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்டுகளில் விளையாடும் இந்தியா: அட்டவணை வெளியீடு

நவம்பர் 22-ல் பெர்த் நகரில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர், ஜனவரி 7-ல் சிட்னி டெஸ்டுடன் முடிவடைகிறது.
ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்டுகளில் விளையாடும் இந்தியா: அட்டவணை வெளியீடு

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த இரு டெஸ்ட் தொடர்களையும் கோலி, ரஹானே தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த வருடக் கடைசியில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

நவம்பர் 22-ல் பெர்த் நகரில் தொடங்கும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர், ஜனவரி 7-ல் சிட்னி டெஸ்டுடன் முடிவடைகிறது. பெர்த், அடிலெய்ட், பிரிஸ்பேன், மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களில் டெஸ்டுகள் நடைபெறவுள்ளன. இதில் அடிலெய்ட் டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

நவம்பர் 22-26: பெர்த்

டிசம்பர் 6-10: அடிலெய்ட் (பகலிரவு)

டிசம்பர் 14-18: பிரிஸ்பேன்

டிசம்பர் 26-30: மெல்போர்ன்

ஜனவரி 3-7: சிட்னி

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in