முதல் டி20: பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி!

மேக்ஸ்வெல் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.
முதல் டி20: பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி!
@cricketcomau
1 min read

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் தொடரில், பாகிஸ்தான் அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் இன்று பிரிஸ்பேனின் நடைபெற்றது. மழையின் காரணமாக இந்த ஆட்டம் 7 ஓவர்களுக்குக் குறைக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 7 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ஸ்டாய்னிஸ் 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்பாஸ் அஃப்ரிடி ஒரு ஓவர் வீசி 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் ரிஸ்வான் ரன் எதுவும் எடுக்காமலும், பாபர் ஆஸம் 3, உச்மான் கான் 4, சலமான் அகா 4 ரன்களில் அடுத்தடுத்து வெளியேற, 3.2 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது பாகிஸ்தான் அணி.

அப்பாஸ் அஃப்ரிடி 10 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க 7 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆஸி. அணி தரப்பில் பார்ட்லெட் மற்றும் நாதன் எலிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸி. அணி இத்தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டி20 வரும் நவ.16 அன்று நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in