சாம்பியன்ஸ் கோப்பை: கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி. அணி அறிவிப்பு

2023 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியிலிருந்து மூன்று மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பை: கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி. அணி அறிவிப்பு
ANI
1 min read

சாம்பியன்ஸ் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் 15 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளன.

ஆஸ்திரேலியா பேட் கம்மின்ஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளன.

மோசமான ஃபார்ம் காரணமாக ஜேக் ஃபிரேசர்-மெக்கர்க் அணியில் சேர்க்கப்படவில்லை. 2023 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலிருந்து மூன்று மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.

டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுவிட்டார். கேமரூன் கிரீன் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. ஷான் அபாட் தேர்வாகவில்லை.

கம்மின்ஸின் கணுக்கால் காயம் தொடர்புடைய ஸ்கேன் முடிவுகளைப் பொறுத்து, சாம்பியன்ஸ் கோப்பையில் அவர் சேர்க்கப்படுவது இறுதி செய்யப்படும் என அந்த அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்திருந்தார். தற்போது கம்மின்ஸ் தலைமையில் அணி அறிவிக்கப்பட்டாலும், அவர் எந்தளவுக்குப் போட்டியில் பங்கேற்பார் என்பது உறுதிபடத் தெரியவில்லை.

இலங்கை டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படாத ஜோஷ் ஹேசில்வுட் (காயம்), மிட்செல் மார்ஷ் சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

ஆஸ்திரேலிய அணி

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நேதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸாம்பா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in