ஆசியக் கோப்பை டி20: பாபர் ஆஸம், ரிஸ்வான் இல்லாத பாக். அணி அறிவிப்பு | Asia Cup T20

இருவரும் கடைசியாக கடந்தாண்டு டிசம்பரில் சர்வதேச டி20யில் விளையாடினார்கள்.
ஆசியக் கோப்பை டி20: பாபர் ஆஸம், ரிஸ்வான் இல்லாத பாக். அணி அறிவிப்பு | Asia Cup T20
ANI
1 min read

ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான சல்மான் ஆகா தலைமையிலான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மூத்த வீரர்களான பாபர் ஆஸம், முஹமது ரிஸ்வான் ஆகியோருக்கு அணியில் இடமில்லை.

ஆசியக் கோப்பைப் போட்டி இம்முறை டி20 ஆட்டங்கள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது. இப்போட்டி செப்டம்பர் 9 முதல் ஆகஸ்ட் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபியில் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளும் குரூப் சுற்றில் செப்டம்பர் 14 அன்று மோதுகின்றன.

ஆசியக் கோப்பைக்கு முன்பு, இதற்குத் தயாராகும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடுகிறது பாகிஸ்தான். முத்தரப்பு டி20 மற்றும் ஆசியக் கோப்பை டி20-க்கான சல்மான் ஆகா தலைமையிலான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் ஆஸம், முஹமது ரிஸ்வானுக்கு இந்த அணியில் இடமில்லை. பாபர் ஆஸம் கடைசியாக கடந்தாண்டு டிசம்பரில் சர்வதேச டி20யில் விளையாடினார். பிஎஸ்எல் 2025 போட்டியில் 10 இன்னிங்ஸில் 288 ரன்கள் எடுத்தார். ஆனால், இவருடைய ஸ்டிரைக் ரேட் 128.57 தான். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் ஓர் அரை சதம் கூட அடிக்காமல் ஒரு இன்னிங்ஸில் டக் அவுட்டும் ஆனார்.

ரிஸ்வானும் கடைசியாக கடந்தாண்டு டிசம்பரில் தான் சர்வதேச டி20யில் விளையாடினார். பிஎஸ்எல் போட்டியில் இவர் 139.54 ஸ்டிரைக் ரேட்டில் 367 ரன்கள் குவித்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரூநாள் தொடரிலும் ஓர் அரை சதம் அடித்தார். எனினும், இவருக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை.

அதேசமயம், 17 பேர் கொண்ட அணியில் ஃபகார் ஸமான், சயிம் அயூப், ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முத்தரப்பு டி20 தொடர் மற்றும் ஆசியக் கோப்பை டி20-க்கான பாகிஸ்தான் அணி

சல்மான் ஆகா (கேப்டன்), அப்ரார் அஹமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஸமான், ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷா, முஹமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முஹமது நவாஸ், முஹமது வாசிம், சஹிப்ஸதா ஃபர்ஹான், சயிம் அயூப், சல்மான் மிர்ஸா, ஷாஹீன் அஃப்ரிடி, சுஃபியான் முகீம்

Asia Cup T20 | Asia Cup | Babar Azam | Mohammed Rizwan | Salman Agha | Pakistan | Team Pakistan | Pakistan Squad | Asia Cup Squad | PCB | Pakistan Cricket Board

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in