
ஆசியக் கோப்பை 2025 போட்டியின் முழு அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
டி20 ஆட்டங்கள் கொண்ட இப்போட்டி செப்டம்பர் 9 - 28 தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபியில் நடைபெறவுள்ளன. 2023 போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்திய அணி.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 நாடுகள் ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கின்றன. மே மாத ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் என இரு அணிகளும் ஒரு கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக பங்கேற்பதால் ஆசியக் கோப்பைக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
குரூப் சுற்றில் செப்டம்பர் 14-ல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபையில் மோதுகின்றன. இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் ஏ-வில் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் உள்ளன.
குரூப் சுற்றுக்குப் பிறகு இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதியடைந்தால் இரு அணிகளும் மீண்டும் செப்டம்பர் 21-ல் துபையில் மோத வாய்ப்புள்ளது. குரூப் சுற்றில் இந்திய அணி முதலிடம் பிடித்தால் சூப்பர் 4 சுற்றில் அதன் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் துபையில் நடைபெறும் இறுதிச் சுற்றுக்கும் தகுதியடைந்தால் செப்டம்பர் 28-ல் இரு அணிகளும் மூன்றாவது முறையாகவும் மோத வாய்ப்புள்ளது.
===
இந்தியாவின் குரூப் ஆட்டங்கள்
செப். 10 - துபாய்
இந்தியா vs யுஏஇ
செப். 14 - துபாய்
இந்தியா vs பாகிஸ்தான்
செப். 19 - அபுதாபி
இந்தியா vs ஓமன்