ஆசியக் கோப்பை 2025 அட்டவணை வெளியீடு!

செப்டம்பர் 14-ல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் (கோப்புப் படம்)
இந்தியா - பாகிஸ்தான் மோதல் (கோப்புப் படம்)ANI
1 min read

ஆசியக் கோப்பை 2025 போட்டியின் அட்டவணை அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.

டி20 ஆட்டங்கள் கொண்ட இப்போட்டி செப்டம்பர் 9 - 28 தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. 2023 போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்திய அணி.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. மே மாத ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் என இரு அணிகளும் ஒரு கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக பங்கேற்பதால் ஆசியக் கோப்பைக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 14-ல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் ஏ-வில் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன். குரூப் சுற்றுக்குப் பிறகு இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதுகின்றன. இதற்குத் தகுதியடைந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் செப்டம்பர் 21-ல் மோத வாய்ப்புள்ளது. இறுதிச் சுற்றுக்கு இரு அணிகளும் தகுதியடைந்தால் செப்டம்பர் 28-ல் மூன்றாவது முறையாகவும் மோத வாய்ப்புள்ளது.

இந்தியாவின் குரூப் ஆட்டங்கள்

செப். 10

இந்தியா vs யுஏஇ

செப். 14

இந்தியா vs பாகிஸ்தான்

செப். 19

இந்தியா vs ஓமன்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in