ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி சுற்றில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதன் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் கொரியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் (2 கோல்கள்), ஜர்மன்பிரீத் சிங், உத்தம் சிங் ஆகியோர் கோல் அடித்தனர்.
இதன் மூலம் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று (செப். 17) நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.
முன்னதாக 2023-ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றது.