அஸ்வினுக்கு அறுவைச் சிகிச்சை: பிக் பாஷ் போட்டியிலிருந்து விலகல்! | Big Bash | Sydney Thunder | Ashwin |

மருத்துவர்கள் அனுமதி வழங்கும்பட்சத்தில் போட்டியின் கடைசி கட்டத்தில் வீரராக அல்லாமல் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Injured Ashwin ruled out of Big Bash 2025-26
ஆர் அஸ்வின் (கோப்புப்படம்)
2 min read

இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் முழங்கால் காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ள நிலையில், பிக் பாஷ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது:

"சென்னையில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, என் முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து குணமடைய சில நடைமுறைகள் உள்ளன. இதன் விளைவாக பிக் பாஷ் 15 போட்டியை நான் தவறவிடுகிறேன். இதைச் சொல்வதற்குக் கடினமாக தான் உள்ளது. சிட்னி தண்டர் அணியுடன் இணைந்து உங்கள் அனைவரது முன்பும் விளையாட உண்மையில் மிகுந்த ஆவலுடன் இருந்தேன்.

ஆனால், தற்போதைய நிலையைப் பொறுத்தவரை குணமடைந்து வலிமையுடன் மீண்டு வர வேண்டும் என்பது தான் முதன்மை.

ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் எல்லா ஆட்டங்களையும் பார்ப்பேன். இரு அணிகளுக்கும் ஆதரவு தெரிவிப்பேன். ஒருவேளை, மருத்துவர்கள் அனுமதி வழங்கும்பட்சத்தில் போட்டியின் கடைசி கட்டத்தில் அங்கு வர விரும்புகிறேன். நான் வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனால், இது தான் என் எண்ணம்" என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இந்திய முன்னாள் வீரர் அஸ்வின், ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உலகளவில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் இருப்பதாகச் சொல்லி அவர் இம்முடிவை எடுத்தார். இதன்படி, முதலில் ஐஎல்டி20 போட்டியில் அவர் விளையாடுவார் என அறிவிப்பு வெளியானது. ஐஎல்டி20 வீரர்களுக்கான ஏலப் பட்டியலில் அஸ்வினின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அஸ்வினின் அடிப்படை விலை 1.20 லட்சம் அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அஸ்வின் தவிர மற்ற வீரர்கள் அனைவரது விலையும் 1 லட்சம் அமெரிக்க டாலருக்கு குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஐஎல்டி20 போட்டியில் முழுமையாகப் பங்கெடுப்பதாக அஸ்வின் உறுதியளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, பிக் பாஷ் போட்டியிலும் விளையாட அஸ்வின் ஆர்வம் காட்டியிருந்தார். பிக் பாஷ் போட்டியில் சிட்னி தண்டர் அணியுடன் அஸ்வின் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார். ஐஎல்டி20 போட்டியில் விளையாடுவதால், ஜனவரி தொடக்கத்தில் சிட்னி தண்டர் அணியுடன் அவர் இணைவார் என்று தான் அறிவிக்கப்பட்டது. ஐஎல்டி20 ஏலத்தில் எந்தவோர் அணியாலும் அஸ்வின் தேர்வு செய்யப்படவில்லை. இதன் காரணமாக, பிக் பாஷ் போட்டியில் அவர் முழுமையாகப் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் அவர் காயம் காரணமாக பிக் பாஷ் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மருத்துவர்கள் அனுமதி வழங்கும்பட்சத்தில் அவர் போட்டியின் கடைசி கட்டத்தில் வீரராக அல்லாமல் அணிக்கு உதவ முயற்சித்து வருவதாகவும் தெரிகிறது.

Summary

Knee-injured Ravichandran Ashwin is set to undergo surgery, ruling him out of the 2025–26 Big Bash League, where he was slated to represent the Sydney Thunder

Sydney Thunder | Ashwin | BigBash | Big Bash |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in