சிஎஸ்கேவுக்கு வருகிறாயா?: வாஷிங்டன் சுந்தரிடம் நேரடியாகக் கேட்ட அஸ்வின்! | Washington Sundar | Ashwin |

ஐபிஎல் போட்டியிலிருந்து அஸ்வின் ஓய்வுபெற்றதால், சிஎஸ்கேவில் அவருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தார் இருப்பார் என்று பேசப்படுகிறது.
Ashwin clarifies rumours about Washington Sundar’s move from Gujarat Titans to Chennai Super Kings
வாஷிங்டன் சுந்தர் (கோப்புப்படம்)
2 min read

குஜராத் டைடன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வாஷிங்டன் சுந்தர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறவுள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து அவரிடமே விளக்கம் கேட்டுள்ளார் அஸ்வின்.

இந்திய முன்னாள் வீரர் ஆர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கிரிக்கெட் பற்றி தொடர்ச்சியாகக் காணொளிகளை வெளியிட்டு வருகிறார். கிரிக்கெட் ஆட்டங்கள் குறித்த விமர்சனங்கள், கலந்துரையாடல்கள், தெரியாத தகவல்களை விளக்குவது, கிரிக்கெட்டின் நுணுக்கங்களைப் பார்வையாளர்களிடம் கடத்துதல் எனப் பல்வேறு விஷயங்களை முன்வைத்து தொடர்ச்சியாகக் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் குறித்தும் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் அலசி ஆராய்ந்து பேசினார். இவருடன் தமிழக முன்னாள் வீரர் கே விக்னேஷ் மற்றும் பிரபல அனலிஸ்ட் பிரசன்னா பிடாக் கலந்துரையாடினார்கள். அப்போது, ஐபிஎல் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறப்போவதாகப் பேசினார்கள். கிடைத்த தகவல்கள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கே விக்னேஷ் தெரிவித்தார்.

இந்நிலையில் அஸ்வினின் யூடியூப் சேனலில் அடுத்த காணொளி நேற்று வெளியானது. இதில் வாஷிங்டன் சுந்தர் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அணி மாறுவது குறித்து அஸ்வின் விளக்கமளித்தார்.

"வாஷிங்டன் சுந்தரிடமே இதுபற்றி கேட்டுவிடலாம் என அவரை அழைத்தேன். அவரிடம் பேசிவிட்டேன். என்ன ஆச்சு என்று வாஷிங்டன் சுந்தரிடம் கேட்டேன். அதற்கு தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்று வாஷிங்டன் கூறினார்" என்று அஸ்வின் பேசினார்.

தொடர்ந்து, தன்னிடம் வாஷிங்டன் சுந்தர் பகிர்ந்ததையும் அஸ்வின் வெளியிட்டார்.

அஸ்வினின் கூற்றுபடி வாஷிங்டன் சுந்தர் அவரிடம் பேசியதாவது:

"குஜராத் டைடன்ஸில் என்னை எடுத்தார்கள். கடந்தாண்டு எல்லா ஆட்டங்களிலும் நான் விளையாடவில்லை. ஆனால், இங்கு இருந்ததை நான் மிகவும் ரசித்து அனுபவித்தேன். என்னுடைய கிரிக்கெட் அம்சங்களும் நன்கு மேம்பட்டன. பேட்டிங், பந்துவீச்சு என நான் உழைப்பைச் செலுத்த நிறைய வாய்ப்பு கிடைத்தது. பயிற்சிகள் அட்டகாசமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் அணியுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. எனக்குத் தெரிந்து அணியில் எனக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என நினைக்கிறேன். எனவே, நான் எந்தவிதமான உரையாடலையும் தொடங்கவில்லை.

ஒருவேளை அணி நிர்வாகம் சார்பில் ஏதாவது பேசியிருந்தால், எனக்கு அது எதுவும் தெரியாது. ஆனால், தற்போதைய நிலையில் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்" என்று அஸ்வினிடம் வாஷிங்டன் சுந்தர் கூறியதாகத் தெரிகிறது.

ஐபிஎல் 2025-ல் குஜராத் டைடன்ஸுக்காக 6 ஆட்டங்களில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 26.6 சராசரியில் 166.25 ஸ்டிரைக் ரேட்டில் 133 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Summary

Ashwin, who personally spoke to Washington Sundar, has clarified the rumours about his alleged move from Gujarat Titans to Chennai Super Kings.

Washington Sundar | R Ashwin | Ashwin | Chennai Super Kings | CSK | IPL | IPL 2026 |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in