அஸ்வினின் சுயசரிதை: ஜூன் 21-ல் வெளியீடு!

2010 முதல் இந்திய அணிக்காக விளையாடிவரும் அஸ்வின் இதுவரை 100 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
அஸ்வினின் சுயசரிதை: ஜூன் 21-ல் வெளியீடு!
அஸ்வினின் சுயசரிதை: ஜூன் 21-ல் வெளியீடு!@ashwinravi99

பிரபல கிரிக்கெட் வீரரான அஸ்வினின் சுயசரிதை, ஜூன் 21 அன்று சென்னையில் வெளியிடப்படவுள்ளது.

2010 முதல் இந்திய அணிக்காக விளையாடிவரும் அஸ்வின் இதுவரை 100 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். டெஸ்டில் 516 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 156 விக்கெட்டுகளும், டி20 ஆட்டங்களில் 72 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் 5 சதங்கள் அடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் அஸ்வினின் சுயசரிதை, ‘ஐ ஹேவ் தி ஸ்ட்ரீட்ஸ்: எ குட்டி ஸ்டோரி’ (I Have the Streets: A Kutti Cricket Story) என்கிற பெயரில் வெளியாகவுள்ளது. பிரபல பதிப்பகமான ஈபரி (பென்குயின்) இந்நூலைப் பதிப்பித்துள்ளது. அஸ்வின் சுயசரிதையைப் பிரபல கிரிக்கெட் நிபுணர் சித்தார்த் மோங்கா எழுதியுள்ளார்.

அஸ்வினின் சுயசரிதை, ஜூன் 21 அன்று சென்னையில் வெளியிடப்படவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in