தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டுள்ளேன்: அஸ்வின் உருக்கம்

ஒருநாள் நான் உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னுடைய ஆன்மா சேப்பாக்கத்தை தான் சுற்றிக்கொண்டிருக்கும்.
அஸ்வின் விருது விழா
அஸ்வின் விருது விழா@Tnca

சர்வதேச அளவில் 100 டெஸ்டுகளில் விளையாடி 500-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த, சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஐசிசி மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன், இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அஸ்வின் படைத்த சாதனையைப் பாராட்டும் வகையில் ரூ.1 கோடி ஊக்கத் தொகையை தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் என்.சீனிவாசன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அஸ்வின் பேசியதாவது:

“2008-ல் நான் இந்தியா சிமெண்ட்ஸுக்காக விளையாடிய ஒரு ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அப்போது அங்கு சிறப்பு விருந்தினராக வந்த ஸ்ரீகாந்த் நான் சிறப்பாக பந்துவீசியதாகக் கூறினார்.

மேலும் காசி விஸ்வநாதனிடம், “என்ன காசி அஸ்வினை எடுக்கலையா?” எனக் கேட்டார். அடுத்த நாள் நான் சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்டேன்.

தோனி எனக்கு பல வாய்ப்புகளை வழங்கி என்னை அனைத்து வகையிலும் ஊக்கப்படுத்தினார். நான் தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டுள்ளேன். மேலும் என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

ஒருநாள் நான் உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னுடைய ஆன்மா சேப்பாக்கத்தை தான் சுற்றிக்கொண்டிருக்கும், அந்தளவுக்கு அந்த இடம் எனக்கு முக்கியமானது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in