ஆஷஸ் 2025-26: அட்டவணை வெளியீடு

இங்கிலாந்து அணி கடைசியாக 2015-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்றது.
ஆஷஸ்
ஆஷஸ்@icc
1 min read

ஆஷஸ் 2025-26 டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 21 அன்று தொடங்கும் இத்தொடரின் முதல் டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெறவுள்ளது.

1982-83-ல் நடைபெற்ற ஆஷஸ் முதல் கடைசியாக நடைபெற்ற ஆஷஸ் வரை, இத்தொடரின் முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் தான் நடைபெற்றது. ஆனால் இம்முறை முதல் டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெறவுள்ளது.

2-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து அணி கடைசியாக 2015-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்றது, ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக 2010-11-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்றது. மேலும் ஆஸ்திரேலியாவில் கடைசியாக விளையாடிய மூன்று ஆஷஸ் தொடர்களிலும் 5-0, 4-0, 4-0 என மோசமாக இங்கிலாந்து தோற்றது.

2015-க்கு பிறகு நடைபெற்ற 4 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரு தொடர்களை வென்றது. இருமுறை 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.

ஆஷஸ் 2025-26 அட்டவணை

நவம்பர் 21-25: பெர்த்

டிசம்பர் 4-8: பிரிஸ்பேன் (பகலிரவு)

டிசம்பர் 17-21: அடிலெய்ட்

டிசம்பர் 26-30: மெல்போர்ன்

ஜனவரி 4-8: சிட்னி

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in