
ஐபிஎல் மெகா ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரைக் கடைசிக் கட்டத்தில் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
அர்ஜுன் டெண்டுல்கரை 2021 ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கும் அடுத்த வருட ஏலத்தில் ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்தது மும்பை அணி. 2023-ல் 4 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியதால் அடுத்த வருடம் அர்ஜுனைத் தக்கவைத்தது. எனினும் இதுவரை 5 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள அர்ஜுன் டெண்டுல்கர் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். எகானமி - 9.36.
இந்நிலையில் இந்த வருட மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்பட எந்த அணியும் அர்ஜுன் டெண்டுல்கரைத் தேர்வு செய்ய முதலில் ஆர்வம் காட்டவில்லை. ஏலத்தில் மீண்டும் ஒருமுறை அர்ஜுனின் பெயர் வந்தபோதும் யாரும் அசைந்துகொடுக்கவில்லை. கடைசியாக ஒருமுறை அவர் பெயர் மீண்டும் ஏலத்தில் விடப்பட்டது. இந்தமுறை மும்பை ஏமாற்றவில்லை. அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்துக்குத் தேர்வு செய்து அர்ஜுனுக்கு ஆறுதல் அளித்தது.