ஐபிஎல்லுக்கு மட்டும் அனுமதியா?: இங்கி. வீரர்கள் எதிர்ப்பு

ஈசிபி, ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்க முன்வந்துள்ளது.
ஐபிஎல்லுக்கு மட்டும் அனுமதியா?: இங்கி. வீரர்கள் எதிர்ப்பு
1 min read

இங்கிலாந்தில் முதல்தர கிரிக்கெட் மற்றும் கவுண்டி கிரிக்கெட்டில் ஒப்பந்தம் கொண்டுள்ள வீரர்கள், இங்கிலாந்துக்கான கிரிக்கெட் பருவத்தின்போது வெளிநாட்டு டி20 லீக்களில் விளையாட தடையில்லாச் சான்றிதழ் கொடுக்கப்படாது என்கிற புதிய நடைமுறையைக் கொண்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் சிறந்த வீரர்கள் விளையாட வேண்டும் என்பது ஈசிபியின் விருப்பம். இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், மேஜர் கிரிக்கெட் லீக் போன்ற லீக் போட்டிகளில் விளையாடுவது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு அவ்வளவு சுலபமாக இருக்காது.

அடுத்த வருடம் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி, இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் நடைபெறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கு அனுமதி வழங்காத ஈசிபி, ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து வீரர்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்க முன்வந்துள்ளது. இது ஐபிஎல் ஒப்பந்தம் இல்லாத இங்கிலாந்து வீரர்களை மேலும் கோபமடைய வைத்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் 12 வீரர்கள் தேர்வானார்கள். இந்தப் பிரச்னையால் வீரர்கள், ஓய்வு பெற்றுவிட்டு டி20 லீக்குகளில் விளையாடுவார்கள் என்றும் அஞ்சப்படுகிறது.

பிசிஏ எனப்படும் பிரொஃபஷனல் கிரிக்கெட் வீரர்களின் சங்கம் ஈசிபியுடன் இணைந்து இந்தப் பிரச்னையை தீவிரமாக விவாதித்து வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in