முடிவுக்கு வரும் சகாப்தம்: கடைசி டெஸ்டில் ஆண்டர்சன்

700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஒரே வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன்.
ஆண்டர்சன்
ஆண்டர்சன்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டுடன் ஓய்வு பெறவுள்ளார் ஆண்டர்சன்.

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஜூலை 10 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் டெஸ்ட் நடைபெற்று வரும் நிலையில், இதுவே ஆண்டர்சனின் கடைசி டெஸ்டாகவும் அமைந்துள்ளது.

2003-ல் இதே இடத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார் ஆண்டர்சன். தனது அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஆண்டர்சன்.

இங்கிலாந்துக்காக 187 டெஸ்டுகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளா். 194 ஒருநாள் ஆட்டங்களில் 269 விக்கெட்டுகளையும், 19 சர்வதேச டி20யில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் தனது கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மேற்கிந்தியத் தீவுகள் அணியை 121 ரன்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து. அறிமுக வீரர் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஆண்டர்சனின் 21 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல மாற்றங்களை நாம் பார்த்திருப்போம். சர்வதேச டி20 கிரிக்கெட் என்ற ஒன்றே 2005-ல் தான் அறிமுகமானது. அதேபோல இந்த 21 வருடங்களில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக 100 வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர். அதில் ரேஹன் அகமது ஆண்டர்சன் விளையாடிய முதல் டெஸ்டின் போது பிறக்கவே இல்லை.

700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஒரே வேகப்பந்து வீச்சாளர் உட்பட பல சாதனைகளை படைத்த 41 வயது ஆண்டர்சன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டுடன் தனது பயணத்தை முடித்துக்கொள்ளப் போகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in